Video: கரப்பான் பூச்சியைக் கொல்ல தன் தோட்டத்தை வெடிக்க வைத்த நபர்

கூட்டை அழிக்க துளைக்குள் பெட்ரோல் ஊற்றி பின் அதன் மீது தீப்பெட்டி குச்சிகளை உரசி வீசத் தொடங்கினார். மூன்றாவது குச்சியில் தீ பற்றி புல்வெளி முற்றிலும் வெடித்து சிதறுகிறது.

Video: கரப்பான் பூச்சியைக் கொல்ல தன் தோட்டத்தை வெடிக்க வைத்த நபர்

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல தன் வீட்டின் கொல்லைப்புற முற்றத்தையே வெடிக்கச் செய்துள்ளார்

பிரேசிலில் ஒருவர் கரப்பான் பூச்சிகளைக் கொல்ல முயன்றபோது தன் வீட்டின் கொல்லைப்புற முற்றத்தையே வெடிக்கச் செய்துள்ளார். இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  சீசர் ஷ்மிட்ஸ் என்ற நபர் பூச்சிகளை விரட்டுவதற்கான முயற்சியில் தன் கொல்லப்புறத்தையே வெடிக்கச் செய்துள்ளார். நியூயார்க் போஸ்ட்டின் படி, “எங்கள் தோட்டத்தில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் இருப்பதாக என் மனைவி புகார் தெரிவித்தார். கரப்பான் பூச்சியின் கூட்டை அழிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டதால் இந்த முயற்சியை செய்ததாக தெரிவித்தார்.

கூட்டை  அழிக்க துளைக்குள் பெட்ரோல் ஊற்றி பின் அதன் மீது தீப்பெட்டி குச்சிகளை உரசி வீசத் தொடங்கினார். மூன்றாவது குச்சியில் தீ பற்றி புல்வெளி முற்றிலும் வெடித்து சிதறுகிறது. ஆனால், கடைசி வரை அவரால் கரப்பான் பூச்சியின் கூட்டை அழிக்க முடியவில்லை.

ஞாயிற்றுக் கிழமை ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். பல வேடிக்கையான கமெண்டுகளையும் பெற்றுள்ளன.

டெய்லி மெயில் படி, ஷ்மிட்ஸ் தனது புல்வெளியை சுத்தம் செய்து மீண்டும் சரிப்படுத்தியுள்ளார் என்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இல்லையென அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு நபர் சிலந்திகளை எரிக்க முயன்றபோது தனது வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


More News