'கரக்காட்டக்காரன்' நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார

உடல் நலக் குறைவால் தனது 78 வயதில் இன்று இயற்கை எய்தினார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
'கரக்காட்டக்காரன்' நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார

கோவை: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் பிறந்த வெள்ளை சுப்பையா, முதலில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் தமிழ்த் திரைத்துறைக்கு வந்துள்ளார்.

கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், சிவாஜி கனேஷன், கமல், ரஜினிகாந்த் முதல் இளம் நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோருடனும் நடித்துள்ளார். தமிழக அரசின் விருது, கலை பண்பாட்டுத் துறை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தன் ஒரே மகளான தனலட்சுமி வீட்டில் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், உடல் நலக் குறைவால் தனது 78 வயதில் இன்று இயற்கை எய்தினார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................