பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்!

காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்!

ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார்.


Bengaluru: 

ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது.  

காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார். 

கிரிஷ் கர்னாடுக்கு, 1974 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கிரிஷ் கர்னாட் கவுரிவிக்கப்பட்டார். 

1938 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார். அங்குதான் அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.

உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................