நடிகை வித்யா சின்ஹா காலமானார்! திரைத்துறையினர் அஞ்சலி!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வித்யா சின்ஹா மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நடிகை வித்யா சின்ஹா காலமானார்! திரைத்துறையினர் அஞ்சலி!!

நடிகை வித்யா சின்ஹா


New Delhi: 

மும்பை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை வித்யா சின்ஹா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு இருந்து வந்தது.

1974-ல் வெளியான பாசு சாட்டர்ஜியின் ‘ரஜினிகாந்தா' படத்தில் அமோல் பலேகருடன் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது.

கடந்த ஞாயிறன்று அவருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு சற்று கூடுதலாக காணப்பட்டது. இதனால் அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

திரைத்துறையில் தனது 18-வது வயதில் வித்யா காலடி எடுத்து வைத்தார். முதலில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் வாய்ப்புகள் வரவே, நடிகையாக உருவெடுத்தார்.

முன்னணி நடிகையான பின்னர் கடந்த 1986-ல் ஜீவா என்ற இந்தி படத்தில் நடித்தார். இதையடுத்து நடிப்புக்கு ஓய்வு கொடுத்த வித்யா கடந்த 2011-ல் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘பாடி கார்டு' திரைப்படத்தில் மீண்டும் திரைக்கு வந்தார்.

மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................