கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வெங்கைய்யா நாயுடு பாராட்டு!

தற்போதுள்ள சூழ்நிலையில் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாளை நாடு முழுவதும் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் பலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வெங்கைய்யா நாயுடு பாராட்டு!

ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி கமலாத்தாளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். பல ஆண்டுகளாக இட்லியை வெறும் 1 ரூபாய்க்கு விற்று வந்துள்ளார் கமலாத்தாள். அவரைப் பற்றிய தகவல் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாளை நாடு முழுவதும் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் பலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர். 

தனது பணி குறித்து கமலாத்தாள் கூறும்போது, “வடிவேலம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் பலர் நடுத்தர வர்கத்தையோ, பொருளாதார நிலையில் பின்தங்கிய வர்கத்தையோ சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் தினக்கூலிகளாகவே இருக்கிறார்கள். 

அப்படி இருக்கையில், காலை உணவுக்கு 15 ரூபாய், 20 ரூபாய் கொடுத்து அவர்களால் சாப்பிட முடியாது. எனவே, அவர்களை பசியைப் போக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் காரணமாகவே இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்கிறேன். இதிலும் எனக்கு லாபம் கிடைக்கிறதுதான். ஆனால், அது குறைவாகத்தான் இருக்கும்” என்று பணிவுடன் விளக்கினார். 

அவரைப் பற்றிய செய்தியை, மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்தார். அந்தப் பதிவுடன், ‘கமலாத்தாள் தற்போது மர அடுப்புதான் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு எரிவாயு கொண்ட அடுப்பு வாங்கிக் கொடுக்க நான் தயார்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவு வைரலானது. 

இதைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனம், கமலாத்தாளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கியது. இதையும் ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டில் பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில், கோவை வடிவேலம்பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் பாட்டிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பதிவில், அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................