வேலூரில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்...திமுகவினர் கொண்டாட்டம்! #Highlights

Vellore Lok Sabha Results 2019: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக (DMK) - அதிமுக (ADMK) இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வேலூரில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்...திமுகவினர் கொண்டாட்டம்! #Highlights

திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Vellore Lok Sabha Vote Counting: வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக (ADMK) கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக (DMK) வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி (NTK) வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், அதிமுக (ADMK) வேட்பாளர் ஏ.சி சண்முகம் (A.C. Shanmugam) முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து, முதல்சுற்று முடிவில் திமுக (DMK) வேட்பாளர் கதிர் ஆனந்த் (D.M. Kathir Anand) முன்னிலை வகித்தார். தொடர்ந்து, இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


Vellore Lok Sabha Election Results 2019 Update
Aug 09, 2019
15:30 (IST)
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
Aug 09, 2019
15:27 (IST)
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Aug 09, 2019
15:25 (IST)
உறுதியாகிறது கதிர்ஆனந்த் வெற்றி.. திமுகவினர் கொண்டாட்டம்! 

Aug 09, 2019
15:24 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,85,340
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,77,199
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 26,995

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 8,141
Aug 09, 2019
14:13 (IST)
9,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குதள்ளி, திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தொடர் முன்னிலை வகித்து வருகிறார். இன்னும் 15,000 வாக்குகளே எண்ணப்பட வேண்டி உள்ளதால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
Aug 09, 2019
14:12 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,78,855
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,70,395
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 26,502

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 8,460
Aug 09, 2019
13:57 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,75,152
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,65,294
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 26,272

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 9,858
Aug 09, 2019
13:55 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,68,870
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,57,226
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 25,953

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 11,644
Aug 09, 2019
13:45 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,56,070
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,45,629
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 23,235

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 10,441
Aug 09, 2019
13:25 (IST)
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் - 10,24,352 
இதில், தற்போது வரை 8.5 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.  இன்னும், 1.5 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. 
Aug 09, 2019
13:23 (IST)

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 4,20,408
அதிமுக பெற்ற வாக்குகள் - 4,11,084
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 23,235

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 9,324
Aug 09, 2019
13:01 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 3,81,316
அதிமுக பெற்ற வாக்குகள் - 3,66,842
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 20,309

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 14,474
Aug 09, 2019
12:41 (IST)

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், நோட்டாவுக்கு 6,117 வாக்குகள் பதிவாகியுள்ளன.
Aug 09, 2019
12:38 (IST)
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 2019

திமுக பெற்ற வாக்குகள் - 3,40,4738
அதிமுக பெற்ற வாக்குகள் - 3,27,718
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 18,229

முன்னிலை வாக்குகள் வித்தியாசம் - 12,755
Aug 09, 2019
12:22 (IST)

அதிமுக பெற்ற வாக்குகள் - 2,99,368
திமுக பெற்ற வாக்குகள் - 3,15,448
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 16,454
Aug 09, 2019
12:20 (IST)
காலை முதலே திமுக அதிமுக இடையே, கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது திமுக 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து, முன்னிலை வகித்து வருகிறது. 
Aug 09, 2019
12:10 (IST)
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூர், வாணியம்பாடியில் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குகள்..
Aug 09, 2019
12:07 (IST)

அதிமுக பெற்ற வாக்குகள் - 2,75,748
திமுக பெற்ற வாக்குகள் - 2,87,906
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 14,761
Aug 09, 2019
11:59 (IST)
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி 9,883 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் முன்னிலையில் உள்ளார். 
Aug 09, 2019
11:57 (IST)
தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த ஏ.சி.சண்முகம் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். 
Aug 09, 2019
11:57 (IST)

அதிமுக பெற்ற வாக்குகள் - 2,64,140
திமுக பெற்ற வாக்குகள் - 2,56,633
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 13,539
Aug 09, 2019
11:56 (IST)
அதிமுக 47.4 சதவீத வாக்குகள்
திமுக - 46.7சதவீத வாக்குகள்
நாம் தமிழர் - 2.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர். 
Aug 09, 2019
11:46 (IST)
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் 3,896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
Aug 09, 2019
11:44 (IST)
6 சதவீத்தில் இருந்து 0.63 சதவீதம் ஆக வாக்கு வித்தியாசம் குறைந்தது
Aug 09, 2019
11:42 (IST)
அதிமுக பெற்ற வாக்குகள் - 2,40,351
திமுக பெற்ற வாக்குகள் - 2,37,189
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 12,560
Aug 09, 2019
11:09 (IST)
11 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 3,266 வாக்குகள்
Aug 09, 2019
11:05 (IST)

13,104 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர் முன்னிலை வகித்து வருகிறார். 
Aug 09, 2019
11:04 (IST)
அதிமுக பெற்ற வாக்குகள் - 1,87,750
திமுக பெற்ற வாக்குகள் - 1,74,646
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 9,273

Aug 09, 2019
10:42 (IST)

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் 15,697 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
Aug 09, 2019
10:41 (IST)

அதிமுக பெற்ற வாக்குகள் - 1,41,423
திமுக பெற்ற வாக்குகள் - 1,25,726
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 7,091
Aug 09, 2019
10:28 (IST)
அதிமுக பெற்ற வாக்குகள் - 1,18,874
திமுக பெற்ற வாக்குகள் - 1,05,623
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 5,041
Aug 09, 2019
10:26 (IST)
எண்ணப்பட்ட வாக்குகளில் 95 சதவிகித வாக்குகளை திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். 
Aug 09, 2019
10:20 (IST)
அதிமுக பெற்ற வாக்குகள் - 1,05,301
திமுக பெற்ற வாக்குகள் - 93,411
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 5,041
Aug 09, 2019
10:10 (IST)
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 7,733 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் முன்னிலையில் உள்ளார். 


Aug 09, 2019
10:09 (IST)
அதிமுக பெற்ற வாக்குகள் - 85,200
திமுக பெற்ற வாக்குகள் - 77,467
நாம் தமிழர் பெற்ற வாக்குகள் - 3,950
Aug 09, 2019
10:07 (IST)
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் 7,733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
Aug 09, 2019
10:05 (IST)
காலை 10 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 1,461 வாக்குகள்

Aug 09, 2019
10:05 (IST)
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர் முன்னிலையில் உள்ளார்

Aug 09, 2019
10:02 (IST)
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 72,370 
திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 66,190

Aug 09, 2019
09:57 (IST)
நாம் தமிழர் கட்சி இதுவரை 2036 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 
No more content

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................