வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி! கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

வைகோவுக்கு எதிரி பாஜகவா? காங்கிரசா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசை விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்றவர் வைகோ.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி! கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

வைகோவுக்கு எதிரி பாஜகவா? காங்கிரசா? அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என வைகோவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமித்ஷா தாக்கல் செய்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசினார். 

இந்நிலையில், வைகோவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, காஷ்மீர் பிரச்சனையில் வைகோ பேச எடுத்துக் கொண்ட நேரத்தில் பெரும் பகுதியை காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு வைகோவிடம் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பாஜகவின் தலைவர்களை சந்திக்கிறார்.

பாஜகவின் ஆதரவாளர் என்று முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வைகோவின் அரசியல் பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. 18 ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த திமுகவுக்கு பச்சை துரோகம் செய்தவர், கலைஞருக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ, அவரது முதுகில் பலமுறை குத்தியிருக்கிறார்.

ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக் கொண்ட கலைஞரின் பெருந்தன்மை எங்கே? வைகோவின் சிறுமைத்தனம் எங்கே?

அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பாஜகவின் சதி திட்டத்திற்கு துணை போகலாமா ? இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும்? திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியில் மதிமுக இருக்கிறது.

வைகோ விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வைகோவுக்கு எதிரி பாஜகவா? காங்கிரசா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசை விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................