மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் நிர்மலா சீதாராமன்: வைகோ

கஜா புயல் பாதிப்பின் போது மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் நிர்மலா சீதாராமன் என மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் நிர்மலா சீதாராமன்: வைகோ

ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜராவதற்காக நேற்று டெல்லி சென்றிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த தகவலை படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்தார். 

திமுக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜகவையும் பிரதமர் மோடியையும் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிரான திமுக, காங்கிரஸ் அணியில் உள்ள வைகோ, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, 

பட்டாசு தொடர்பான வழக்கு மார்ச் 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அது தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தனை சந்தித்ததாக தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக நிர்மலா சீதாராமனை சந்திக்க வேண்டும் என்று கூறியதும் என்னை சந்திக்க அவர் அனுமதி கொடுத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கஜா புயல் பாதிப்பை உணர்ந்து மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் என்று அவர் கூறியுள்ளார். வைகோவின் இந்த கருத்து கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................