This Article is From Mar 19, 2019

''உத்தர பிரதேசத்தில் 2 ஆண்டுகளாக ஒரு கலவரம் கூட நடக்கவில்லை'' : யோகி ஆதித்யநாத்

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது மாபியாக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகவும், அவர்கள் உத்தரபிரதேசத்தின் வளத்தை சுரண்டி விட்டதாகவும் யோகி ஆதித்யநாத் புகார் கூறியுள்ளார்.

''உத்தர பிரதேசத்தில் 2 ஆண்டுகளாக ஒரு கலவரம் கூட நடக்கவில்லை'' : யோகி ஆதித்யநாத்

மற்ற மாநிலங்களுக்கு உத்தர பிரதேசம் முன் உதாரணமாக உள்ளது.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு கலவரமும் நடக்கவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். 

2 ஆண்டுகால ஆட்சிகுறித்து யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

கடந்த 2017 மார்ச் மாதம் நான் ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். கொலைகளும், சுரண்டல்களும், வன்முறைகளும் மாநிலத்தில் இருந்தன. 

மாபியாக்கள் மாநிலத்தை சுரண்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது சுரண்டலில் ஈடுபட்டனர்.  அவர்களின் ஆட்சிக்காலம் ஊழல்களின் காலம் என்று வர்ணிக்கலாம்.

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு கலவரமும் உத்தர பிரதேசத்தில் நடைபெறவில்லை.  2012-ல் 227 முக்கிய கலவரங்கள் நடந்திருக்கின்றன. 2013-ல் 247-ம், 2014-ல் 242-ம் நடந்திருக்கின்றன. 

2015-ல் 219 வன்முறைகளும், 2016-ல் 100 வன்முறை சம்பவங்களும் நடந்திருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் இன்று அமைதி திரும்பியிருக்கிறது. 

வன்முறையாளர்கள் மீது எந்தவொரு இரக்கமும் காட்டப்படவில்லை. போலீஸ் என்கவுன்ட்டரில் 73 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக இந்த என்கவுன்ட்டரில் 6 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

.