This Article is From Jan 29, 2019

அழைப்பை ஏற்பதற்கு முன்பே குரல் கேட்கும் - ஐபோனில் புதிய குளறுபடி!

ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் ஒரு சாஃப்ட்வேர் தவற்றை கண்டறிந்து, ஆப்பிள் நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

அழைப்பை ஏற்பதற்கு முன்பே குரல் கேட்கும் - ஐபோனில் புதிய குளறுபடி!

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுதான் அதிக நபர்கள் ஃபேஸ்டைம் மூலம் பேசும் வசதியை அப்டேட் செய்தது.

ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் ஒரு சாஃப்ட்வேர் தவற்றை கண்டறிந்து, ஆப்பிள் நிறுவனத்திடம் கூறியுள்ளனர். ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் உள்ள தவற்றை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆப்பிள் ஐபோனிலிருந்து ஃபேஸ்டைம் மூலம் இன்னொரு ஐபோன் பயன்பாட்டாளருக்கு கால் செய்தால், அவர் அழைப்பை ஏற்பதற்கு முன்பே குரல் கேட்கிறது என்ற தவற்றை கண்டறிந்துள்ளனர். இது அழைப்பை ஏற்பவருக்கு தெரியாது என்பதை ப்ளும்பெர்க் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஃபேஸ்டைமில் கான்ஃபரன்ஸ் அழைப்புகளில் இதே போன்ற குறைகள் உள்ளதாக 9to5Mac.com செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தவற்றை டேட்டா ப்ரைவஸி டே அன்று கண்டறிந்துள்ளனர். இந்த தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு தான் ப்ரைவஸி பாதுகாப்பு குறித்து ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவுத்தார். ஃபேஸ்டைம் தவறு குறித்து ஆப்பிள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுதான் அதிக நபர்கள் ஃபேஸ்டைம் மூலம் பேசும் வசதியை அப்டேட் செய்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.