அமெரிக்க கடற்கரையை நெருங்கும் அதிபயங்கர சூறாவளி… அபாயநிலை எச்சரிக்கை!

அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமெரிக்க கடற்கரையை நெருங்கும் அதிபயங்கர சூறாவளி… அபாயநிலை எச்சரிக்கை!

கரையை கடந்த பின்னர் ஃப்லோரன்ஸ், தென் கிழக்கில் பல நாட்களுக்கு மையம் கொண்டிருக்கலாம்


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்குப் பக்கத்தில் ‘ஃப்லோரன்ஸ்’ சூறாவளி மிகவும் வலுவடைந்து வருகிறது. இந்த சூறாவளியால் வெள்ளம் மற்றும் மிகஅபாயாகரமான காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் சூறாவளியின் வீரியம் அதிகமாகிக் கொண்டே போவதால் அதிக சேதாரத்துக்குவாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஃப்லோரன்ஸ், பிரிவு 4 சூறாவளி வகையைச் சேர்ந்தது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காரலினா மாகாணத்தின் சார்லஸ்டனில் சூறாவளிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃப்லோரன்ஸ் சூறாவளி, வரும் வியாழக் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை, தெற்கு மற்றும் வடக்கு காரலினா மாகாணங்களில் கரையைக் கடக்கும் என்றுகணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழித் தடம் மாறலாம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக காரலினா மற்றும் விர்ஜினியா மாகாணங்களில் தான் ஃப்லோரன்ஸ் சூறாவளி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தைத் தாக்கிய சூறாவளி ஹார்வியைப் போன்று, கரையைக் கடந்த பின்னர் இந்த சூறாவளியும் பெரும் மழை பொழிவைக்கொண்டு வர வாய்ப்புள்ளது. ஃப்லோரன்ஸ் மூலம் தொடர்ந்து மழை பெய்தால், அது 30 இன்ச் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

63it7tf

இதையடுத்து அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................