This Article is From Jul 17, 2019

''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் தலைவரான ஹபீஸ் சையது மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆவார்.

''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து!

ஹபீஸ் சையதின் கைது இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

New Delhi:

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதை கைது செய்வதற்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த அழுத்தம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொடுக்கப்பட்டதாக அவர் ட்வீட் செய்திருக்கிறார். 

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் தலைவரான ஹபீஸ் சையது மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆவார். 

லாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலக நாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  அதில், தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது, பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

.