குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு: ட்ரம்ப் புறக்கணிப்பா..!?

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு: ட்ரம்ப் புறக்கணிப்பா..!?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்தும் இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.


New Delhi: 

வரும் ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு (Donald Trump) இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த அழைப்பை ட்ரம்ப் தற்போது புறக்கணித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

ட்ரம்பை (Donald Trump) இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைத்தது இந்திய அரசு. அது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் சாரா சாண்டர்ஸ், ‘இந்தியாவிடமிருந்து குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை' என்று தகவல் தெரிவித்திருந்தார். 

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் கேட்டபோது, ‘அதிபரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை மாளிகை தான் பதில் தர வேண்டும்' என்று சொல்லிவிட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்தும் இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசு, உலக தலைவர்களை குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................