This Article is From Dec 02, 2019

இந்திய மாணவர் அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர் சரண்டர்

வியாழக்கிழமை பிற்பகலில் உணவகத்திற்கு வெளியே எரிக் டர்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

இந்திய மாணவர் அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர் சரண்டர்

அபிஷேக் சான் பெர்னாடினோவில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

Washington:

அமெரிக்காவில் உயர்படிப்புக்காக சென்ற அபிஷேக் சுதேஷ் பட் என்பவரை பொதுஇடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் அந்நாட்டு காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். எரிக் டர்னர் (42) வயதான நபர் சான் பெர்னார்டினோவில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கொல்லப்பட்ட அபிஷேக் சுதேஷ் (25) ஆந்திர மாநிலமான மைசூரைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் சான் பெர்னாடினோவில்  கணினி அறிவியலில் முதுகலை பட்டம் படித்து வருகிறார். பகுதி நேர வேலையாக அங்குள்ள உணவகத்தில் பணிபுரிந்தும் வருகிறார். 

வியாழக்கிழமை பிற்பகலில் உணவகத்திற்கு வெளியே எரிக் டர்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.  என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எரிக் டர்னருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இறந்த அபிஷேக் சுதேஷ் தனது குடும்பத்தினருக்கு உதவ வேண்டுமென லட்சிய நோக்கத்தோடு படிப்பதற்காகவே வெளிநாடு வந்ததாகவும். தனது தம்பியின் மருத்துவ படிப்புக்கு ஆகும் செலவை இவரை கட்ட முயன்று வர விரும்பியதாகவும் நண்பர்க் தெரிவித்துள்ளார். அபிஷேக்கின் இழப்பு அக்குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

.