This Article is From Dec 19, 2019

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி விலகக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது!!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி விலகக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது!!

செனட் சபைக்கு தீர்மானம் செல்லும் என்பதால் ட்ரம்பின் பதவிக்கு உடனடியாக ஆபத்து ஏதும் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பதவி விலகக் கோரும் தீர்மானம் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது, பெரும்பான்மை பிரதிநிதிகள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பதவி இருந்து வருகிறது. இதனை அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொநத் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், இது தொடர்பான விவாதம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நடைபெற்று வந்தது. ட்ரம்ப் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், அமெரிக்க காங்கிரசுக்கு பல்வேறு தடைகளை உண்டாக்கினார் ஆகிய 2 முக்கிய புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக கடந்த ஜூலை மாதத்தின்போது உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில், வோலோடிமைர் ஜெலன்ஸ்கியை மீண்டும் அதிபராக்குவதற்கு ட்ரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. உக்ரைன் நாட்டில் 2020-ல் அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், ட்ரம்புக்கு எதிரான தீர்மானத்தின்போது பிரதிநிதிகள் அவையில் 230 பேர் எதிராகவும்,  197 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவை உறுப்பினர்களுக்கு பலோசி எழுதியுள்ள கடிதத்தில், ‘அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை சொந்த காரியங்களுக்காகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும், உறுப்பினர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விஷயம். இந்த துயரமான நேரத்தில் நாட்டின் வரலாறு, நாம் எடுத்த உறுதிமொழி, நமது அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்டவற்றை நமது எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பிரதிநிதிகள் மற்றும் செனட் என இரு அவைகள் உள்ளன. ட்ரம்பை பதவி விலகக் கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது செனட்டிற்கு அனுப்பப்பட்டு விவாதம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்துதான் வாக்கெடுப்பு நடைபெறும். இதனால் இப்போதைக்கு ட்ரம்பின் பதவி தப்பினாலும், முழுமையாக அவர் சிக்கலில் இருந்து தப்பிக்கவில்லை.

.