ஹூவேய் சிஎஃப்ஓ கைது: வலுக்குமா அமெரிக்க - சீன மோதல்?

2016லிருந்தே ஈரான் மற்றும் மற்ற நாடுகள் மீதான தடையில் உள்ள  அமெரிக்க விதிமுறைகளை ஹூவேய் மீறி வருவதாக கூறியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஹூவேய் சிஎஃப்ஓ கைது: வலுக்குமா அமெரிக்க - சீன மோதல்?

வான்ஸூ மட்டுமல்ல 2010ம் ஆண்டிலிருந்து இதேபோல உயர்மட்ட அதிகாரிகள் 5க்கும் அதிகமானோர் இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


உயர்மட்ட தொழிலதிபர்கள் சிலர், எல்லை தாண்டி கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இருக்கும்.  அதுபோன்ற ஒரு டெக் நிறுவன உயரதிகாரியின் கைது சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுக்கு இடையூறாக இருக்கும் என வழக்கறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹூவேய் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியான மெங் வான்ஸூ, கனடாவை சேர்ந்த அதிகாரிகளால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிகாரிகளின் சீனப்பயணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்த கைது நடந்துள்ளது. 

ஹூவேய் சீனாவின் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்று. இந்த கைது அமெரிக்கர்களின் சீனாவின் மீதான தொழில்நுட்ப துறை அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என சீன செய்திகள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் பாட்ரிக் ஹேன்ஸ்''வான்ஸூக்கு அமெரிக்க அதிகாரிகள் ஏற்கெனவே சீன சட்டவிதிகளின் படி சில கேள்விகளை முன் வைத்திருந்தனர். ஆனால் இந்த கைது அதற்காக நடக்கவில்லை. சீனா கமர்ஷியல் வர்த்தகம் சார்ந்து சில கேள்விகளை முன்வைத்தது. அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை என்றார். 

வான்ஸூ மட்டுமல்ல 2010ம் ஆண்டிலிருந்து இதேபோல உயர்மட்ட அதிகாரிகள் 5க்கும் அதிகமானோர் இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வான்ஸூ ஒரு அனுமதிக்கப்படாத நிகழ்வில் கலந்து கொண்டது தெரிய வந்து அவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

வழக்கறிஞர்கள் வான்ஸூவை அப்பாவி என்று கூறியுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கனடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் வான்ஸூ. 2016லிருந்தே ஈரான் மற்றும் மற்ற நாடுகள் மீதான தடையில் உள்ள  அமெரிக்க விதிமுறைகளை ஹூவேய் மீறி வருவதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்கா வசம் வான்ஸூ ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் (Election Results in Tamil) இருந்தும் லேட்டஸ்ட் செய்திகள் & (Live Updates in Tamil) குறித்து தெரிந்து கொள்ள எங்கள் Facebook, Twitter பக்கங்களைப் பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................