This Article is From Mar 06, 2019

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா வைத்த புதிய செக்!

இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூத்தரகம் பல்வேறுபட்ட விசாக்களில் கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா வைத்த புதிய செக்!

160 டாலராக இருந்த விசா கட்டணத்தை 192 டாலராக உயர்த்தியுள்ளது.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கான விசா வழங்கும் கொள்கைகளை மாற்றியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூத்தரகம் பல்வேறுபட்ட விசாக்களில் கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வேலை மற்றும் மிஷினரி விசாக்கள் 5 ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாகவும், பத்திரிக்கையாளர்களுக்கான விசா 5 ஆண்டுகளிலிருந்து 3 மாதங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வர்த்தகம், சுற்றுலா, மாணவர்களுக்கான வீசா ஐந்து ஆண்டுகளாகவே நீடிக்கும் என்று கூறியுள்ளது.  

தனியார் சேனலில் நம்பகத்தகுந்த தகவல்கள் மூலம் வெளியான செய்தி இதனை தெரிவித்துள்ளது. இந்த கொள்கைகள் பாகிஸ்தான் கொள்கைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். பாகிஸ்தானும் பத்திரிக்கையாளர்களுக்கு 3 மாத விசா தான் வழங்குகிறது. 

அரசு அதிகாரிகளுக்கு அவர்களது வேலையை பொறுத்து விசா வழங்கப்படுகிறது. 160 டாலராக இருந்த விசா கட்டணத்தை 192 டாலராக உயர்த்தியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.