குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மறுக்கும் நகரத்து பெண்கள் : ஆளுநர் கருத்து

தாய் பால் கொடுத்தால் உடல் அழகு குறைந்துவிடும் என நகரத்தில் உள்ள பெண்கள் நினைத்து கொண்டிருக்கின்றர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மறுக்கும் நகரத்து பெண்கள் : ஆளுநர் கருத்து
Indore: இந்தோர்: உடல் அழகு குறைந்துவிடும் என்பதால், நகரத்தில் உள்ள பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதில்லை என மத்திய பிரதேச ஆளுநர் அனந்திபென் படேல் கூறியுள்ளார்.

“தாய் பால் கொடுத்தால் உடல் அழகு குறைந்துவிடும் என நகரத்தில் உள்ள பெண்கள் நினைத்து கொண்டிருக்கின்றர். அதனால், குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுகின்றனர்” என்று இந்தோரின் கஷிபூரி அங்கன்வாடி மையத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் அனந்திபென் கூறினார்.

“புட்டியில் பால் கொடுப்பதால் குழந்தைகளின் உடல் நிலை பாதிப்படையும்” என்றார்

தாய் சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை கண்டிப்பாக பதிவிட்டார்

கர்ப்பிணி பெண்கள் அங்கன்வாடி மையங்களில் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், மத்திய அரசு அளிக்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டதின் (சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்) மூலம் பயன்பெறுமாறும் கேட்டு கொண்டார்.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................