This Article is From Nov 26, 2018

சிதைந்து வரும் சீன பெருஞ்சுவர்… மீட்குமா சீனா அரசு?

கட்டுமான கலை உலகின் பிரமாண்டம் என கருதப்படும் சீனபெருஞ்சுவர் தற்போது சிதைய தொடங்கியுள்ளது.

சிதைந்து வரும் சீன பெருஞ்சுவர்… மீட்குமா சீனா அரசு?

சீனபெருஞ்சுவரின் 30 % சுவர் பாதித்துள்ள நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சீன பெருஞ்சுவர் தற்போது சிதைந்து விழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதை சரி செய்ய முயன்று வரும் சீன அரசாங்கம் பெருஞ்சுவரை சரி செய்ய ‘டிரேன்களை' பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுமார் 2000 வருட பழமை வாய்ந்த இந்த சீனப்பெருஞ்சுவர் பல ஆயிரம் மைல் தூரத்திற்க்கு பரந்து விரிந்துள்ளது. உலகமே வியக்கும் அளவிற்க்கு கட்டுமான கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட சுவர் தற்போது சிதைய தொடங்கியுள்ளது.

‘சுவரின் சுமார் 30% பாகங்கள் சிதைவடைய தொடங்கிவிட்டதாக' நேஷ்னல் ஜியாக்ராஃப்பி தெரிவித்த நிலையில் சீன பெருஞ்சுவரின் இந்த நிலைக்கு நவீன மக்களின் வாழ்க்கை முறைகளால் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

எற்கனவே சுவரின் சில பகுதிகளுக்கு செல்ல அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடையிட பட்ட நிலையில் சுவரின் நிலமையை சீர் செய்ய சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.

அதைதொடர்ந்து தற்போது அதிகமான சேதம் ஏற்பட்டுள்ள இடங்களில் ‘டிரோன்கள்' (Drones) வைத்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்து.

இன்டெல் நிறுவனத்தின் ஃவால்கன் 8+ வகை டிரோன்களை வைத்து முப்பரிமாண புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது. அதை வைத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிக பாதிப்பை கண்டறிந்த கட்டுமான வல்லுநர்கள், கட்டிடப்பணிகளை சீர் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த கட்டுமான பணிகளில் பணியாற்றும் கட்டட வடிவமைப்பாளரான சாகோ பேங் ‘பெருஞ்சுவரின் சில பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதியாக மாறிவருகிறது. மிங் வம்சத்தின் ஆட்சிகாலத்தில் (1368-1644) 50 கிலோமீட்டர் பீஜீங்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளே அதிகம் பாதித்துள்ளதாக' தெரிவித்தார்.

மேலும் அவர் பெருஞ்சுவரின் கட்டுமானங்கள் மிகவும் சிக்கலான முறை என்பதால் அதை டிரோன்கள் வைத்து அளவு எடுத்த பின் சீர் செய்ய திட்டமிட்டுள்ளதாக பேங் தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.