‘இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்!’- ராணுவ ஒப்பந்தம் குறித்து ரஷ்யா கருத்து

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்த முறை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியாவுக்கு வருகிறார்

‘இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்!’- ராணுவ ஒப்பந்தம் குறித்து ரஷ்யா கருத்து

அடுத்த மாதம் 4, 5 தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகிறார்

ஹைலைட்ஸ்

  • இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 விமானங்களை வாங்கப் பார்க்கிறது
  • அடுத்த வாரம் அதிபர் புதின், இந்தியாவுக்கு வருகிறார்
  • 8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது
United Nations:

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்த முறை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியாவுக்கு வருகிறார். அவர் இங்கு வருகையில் 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்பது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அதிபர் புதின், இந்தியா-ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வர உள்ளார். இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ராணுவ ஒப்பந்தத்தை இறுதி செய்ய, ரஷ்யா முயலும் என்று தெரிகிறது.  

கடந்த 2007-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் இருந்த போது, ராணுவத் துறை அமைச்சர் ஏ.கே.அத்தோணி, ரஷ்யாவிடமிருந்து 126 நடுத்தர ரக விமானங்களை வாங்குவற்கான ஒப்புதலைப் பெற்றார். அதேபோல பாஜக தலைமையிலான ஆட்சியும் 2015-ல், ராணுவ உபகரணங்களை வாங்க ரஷ்யாவிடம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அக்டோபர், 2016-ல், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு சென்ற போது 39,000 கோடி ரூபாய் செலவில் எஸ்-400 ராணுவ விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அதே நேரத்தில் ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி தலைமையிலான அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் குறித்து தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ராவ், ‘நாங்கள் இந்தியாவுக்கு விமானங்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் போட்டோம். ஆனால், அது குறித்து அடுத்தக்கட்டத் தகவல் எங்களுக்கு வரவில்லை. மற்றப்படி, ரஃபேல் விவகாரம் குறித்தான சர்ச்சைப் பற்றி எனக்குத் தெரியாது’ என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், ‘ரஷ்யாவுட்ன இந்தியா செய்துள்ள ராணுவ ஒப்பந்தங்கள் குறித்தான தெளிவான தகவல்கள் எங்களிடம் இன்னும் பகிரப்படவில்லை. நாட்டின் இறையாண்மைக்கு ஏற்றாற் போல் இந்தியா, இந்த விஷயத்தில் முடிவெடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார். 
 

Listen to the latest songs, only on JioSaavn.com