This Article is From Feb 11, 2019

உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரியங்கா : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மக்களவை தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது முதல் அரசியல் பயணமாக இந்த பேரணி பார்க்கப்படுகிறது.

பேரணி சென்ற வழியெல்லாம் பூக்களை தூவி காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹைலைட்ஸ்

  • உத்தர பிரதேசத்தில் பேரணியை தொடங்கினார் பிரியங்கா
  • பிரியங்காவுடன் ராகுல், சிந்தியா பயணம்
  • உத்தர பிரதேச ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார் ராகுல்
Lucknow:

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் பேரணி நடத்தினார். லக்னோவில் ட்ரக்கில் நின்றவாறு ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆகியோர் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றனர். 

சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது பிரியங்கா உள்ளிட்டோர் காரின் மேல் அமர்ந்தவாறு பயணம் சென்றனர். சூடான டீ-யை பருகவும், பிரியங்கா சென்ற வாகனம் ஆங்காங்கே நின்றது. 

இதுவரையில் தனது தாயாரின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். முதன்முறையாக அவர் இந்த இரு தொகுதிகளுக்கு வெளியே அரசியல் பயணம் மேற்கொள்கிறார். 

3qe76dvk

பிரியங்கா சென்ற லக்னோ தொகுதியானது பாஜக கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு கடந்த 1991-ல் இருந்து பாஜக உறுப்பினர்தான் எம்.பி.யாக இருந்து வருகிறார். 

வாகன பேரணியின்போது ராகுல் காந்தி பேசுகையில், ''பிரியங்காவும், சிந்தியாவும் மக்களவை தேர்தலுக்காக உத்தரபிரதேசத்தில் பணியாற்றுவார்கள். ஆனால் எங்களது விருப்பம் தேர்தலைக் கடந்தது ஆகும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வரையில் நாங்கள் ஓய மாட்டோம்.'' என்றார். 

செல்லும் வழியெல்லாம் தொண்டர்களை பார்த்து தம்ஸ் அப் விரல பிரியங்கா காட்டினார். ட்ரம்ஸை இசைத்தவாறும், காங்கிரஸ் பிரியங்காவை வாழ்த்தி முழக்கம் இட்டவாறும் கட்சித் தொண்டர்கள் பிரியங்காவை பின் தொடர்ந்தனர். பல்வேறு இடங்களில் பிரியங்காவின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடன் பிரியங்கா காந்தியை ஒப்பிட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

o74tqnrg

பிரியங்கா மூலம் உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு திருப்பம் ஏற்படும் என காங்கிரசார் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73-தொகுதிகளை பாஜக கைப்பற்றி மத்தியில் ஆட்சியை பிடித்தது. 

மொத்தம் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி 3 அல்லது 4 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 40 மக்களவை தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளர் என்ற பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த 40 தொகுதிகளில் பிரதமர் மோடியின் வாரணாசி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு மிக்க பகுதியான கோரக்பூர் ஆகியவை வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

.