This Article is From Nov 04, 2018

உ.பி.யில் பெண்ணுக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காவலர் பணி இடைநீக்கம்!

காவல் ஆய்வாளர் அனுராக் வாட்ஸ் கூறுகையில், நந்த குமார் திவாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்

உ.பி.யில் பெண்ணுக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காவலர் பணி இடைநீக்கம்!

நந்த குமார் திவாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்

Sultanpur, Uttar Pradesh:

உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட நந்த குமார் திவாரி பெண்ணிற்கு தவறான மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் அனுராக் வாட்ஸ் கூறுகையில், நந்த குமார் திவாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

போலீஸ் தரப்பில் இதுகுறித்து கூறியதாவது, அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், திவாரியை குடுவார் காவல் நிலையத்தில் முதல்முறையாக தன்னுடைய வழக்கு தொடர்பாக சந்தித்துள்ளார். அப்போதிலிருந்து திவாரி அப்பெண்ணுடன் வாட்ஸ் அப்பில் பேசத் தொடங்கியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் திவாரி செய்த போன் கால்கள் முதலில் அப்பெண்ணுக்கு சம்பந்தமான வழக்குடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு பதில் அளித்துள்ளார். பிறகு இன்ஸ்பெக்டர் அப்பெண்ணிற்கு தவறான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த போது இன்ஸ்பெக்டர் அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

திவாரியின் நடத்தை குறித்து ஐஜி மற்றும் டிஐஜியிடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு திவாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

.