உ..பி யில் காவல்துறை அதிகாரியை கொன்ற பசு குண்டர்கள்: 5 பேர் கைது

கலவரக்காரர்கள் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியையும் அவரது மொபைல் போனையும் திருடிச் சென்றுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

கலவர கும்பலால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார்


New Delhi/Lucknow: 

உத்தர பிரதேசத்தில் நேற்று மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உள்பட 2 பேரை கலவர கும்பல் ஒன்று கல்வீசிக் கொன்றது. அந்த கொலையை செய்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியில் உள்ள புலந்த்சாகரில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டிக் கொல்லப்பட்ட 25 பசு மாடுகளின் சடலங்கள் இருந்ததையொட்டி நேற்று மாலை கலவரம் நடந்தது.

சுமார் 400 பேர் காவல்துறை அதிகாரியை சூழ்ந்து கற்களை வீசியுள்ளனர்.சுபோத் குமார் சிங் கலவரக்காரர்களை கலைக்க வானை நோக்கிச் சுட்டுள்ளார். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

காவல்துறை அதிகாரி தன்னுடைய எஸ்யூவி காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் கலவரக்காரர்கள் காரை துரத்தி பிடித்துள்ளனர். காரை ஓட்டிய ஓட்டுநர் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில் இன்ஸ்பெக்டரை கல்லால் அடித்து விரட்டியுள்ளனர். தலையில் காயமுற்ற சுபோத் குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த நிகழ்வை மொபைல் வீடியோவாக எடுத்துள்ளனர். அதில் காவல்துறை அதிகாரியை சுற்றி வளைத்து நின்ற கலவரக்காரர்கள் ‘கோலி மாரோ' (அவனை சுட்டுத்தள்ளு) என்று கத்திய படி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ab2tbsn8காவல்துறை அதிகாரியை சுட்டு கொன்று அவரது உடலை எஸ்யூவி வாகனத்தில் தொங்கவிட்டு சென்றனர்.

உடற்கூறாய்வு நடந்து முடிந்த நிலையில் சுபோத் குமார் சிங்கின் இடது புருவத்தில் உள்ள புல்லட் காயத்தினால்தான் இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கலவரக்காரர்கள் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியையும் அவரது மொபைல் போனையும் திருடிச் சென்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டரின் டிரைவர் ஆஸ்ரே கூறுகையில், “இரண்டாவது முறையாக சுபோத் குமார் மீது கலவர கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளர். தற்போது அவர் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது. உயிர் பிழைக்க நான் தப்பித்து ஓடிவிட்டேன். நான் சென்ற பிறகு அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்

rduoqdmg

உடற்கூறாய்வு நடந்து முடிந்த நிலையில் சுபோத் குமார் சிங்கின் இடது புருவத்தில் உள்ள புல்லட் காயத்தினால்தான் இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

 

இதில் காவல்துறை அதிகாரியை கொன்ற யோகேஷ் ராஜ் என்ற நபர் முதல் குற்றவாளியை கைது செய்துள்ளனர். யோகேஷ் தான் 25 மாடுகளின் சடலத்தைக் கண்டறிந்து புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இருவர் மட்டும் சம்பவ இடத்திற்கு ஏன் சென்றனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சத்தையும் அவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் கொடுத்துள்ளார். 

காவல்துறையினர் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................