
காவல்துறை ராம் யாதவ்வையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளனர். (Representational)
உத்தர பிரதேசத மாநிலத்தின் பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் 6 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். உடலை கண்டதுண்டமாக்கி கிராமத்தின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
6 வயது சிறுவனான ஃபரித் என்ற சூரஜ் யாதவ் நவம்பர் 19-ம் தேதி ராம் சாவ்ரே யாதவால் கொலை செய்யப்பட்டான். ராம் யாதவ் சிறுவனின் உடலை கூறுபோட்டு கிராமத்தின் வெவ்வேறு இடத்தில் மறைத்து வைத்து விட்டு வெளியேறிவிட்டார்.
சிறுவனின் தாயை ராம் யாதவ்வின் சகோதரர் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் கணவரின் குடும்ப பெயரை மகனுக்கும் வைத்துள்ளார். இருப்பினும் சிறுவன் இருப்பதை ராம் யாதவ் விரும்பவில்லை. இதனால் சிறுவனைக் கொலை செய்துள்ளார். பின் சிறுவனைக் காணவில்லையென ஊரில் கூறத் தொடங்கியுள்ளார். காவல்துறை ராம் யாதவ்வையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளனர்.