This Article is From Dec 27, 2019

உ.பி காவல்துறை அதிகாரியை வன்முறைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய நபர்

“அவர் பலத்த காயமடைந்தார். நான் அவரைக் காப்பாற்றுவேன் என்று அவருக்கு உறுதியளித்தேன். அப்போது அவருடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. நான் செய்தது மனித நேயத்திற்காக மட்டுமே” என்று காதர் தெரிவித்தார்.

உ.பி காவல்துறை அதிகாரியை வன்முறைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய நபர்

ஃபிரோசாபாத்தில் காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களிடையே வன்முறை வெடித்தது.

Firozabad:

உத்தர பிரதேசத்தில் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் சுற்றி வளைத்து காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளனர். முஸ்லிம் நபரொருவர அவரை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் காவல் நிலையத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.

காவல் துறைஅதிகாரியான அஜய்குமாரை டிசம்பர் 20-ம் தேதி ஹஜ்ஜி காதர் என்ற நபர் மீட்டு காயத்திற்கு உரிய சிகிச்சை அளித்துள்ளார். ஹஜ்ஜி காதர் அஜய்குமாரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். 

“ஹஜ்ஜி  காதிர் சஹாப் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். என் விரல்களிலும் தலையிலும் காயங்கள் இருந்தன. அவர் எனக்கு தண்ணீர் மற்றும் உடைகளை அணியக் கொடுத்தார். பாதுக்காப்பாக இருப்பீர்கள் என்று உறுதியளித்தார். பின்னர் அவரே என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்” என்று அஜய்குமார் தெரிவித்தார். 

“அவர் என் வாழ்வில் ஒரு தேவதை போல வந்தார். அவர் இல்லையென்றால் நான் கொல்லப்பட்டிருப்பேன்” என்று தெரிவித்தார்.

நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த நபர் நமாஸ் செய்ய சென்றபோது கும்பல் ஒன்று இவரை சூழ்ந்து நின்றதாக கூறினார்.

“அவர் பலத்த காயமடைந்தார். நான் அவரைக் காப்பாற்றுவேன் என்று அவருக்கு உறுதியளித்தேன். அப்போது அவருடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. நான் செய்தது மனித நேயத்திற்காக மட்டுமே” என்று காதர் தெரிவித்தார்.

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது டிசம்பர் 20 ம் தேதி ஃபிரோசாபாத்தில் காவல்துறைக்கும்  எதிர்ப்பாளர்களிடையே வன்முறை வெடித்தது.

.