சாலை விபத்தில் உயிரிழந்த உத்தர பிரதேச பாஜக தலைவர்

“ஆஷா சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்”

சாலை விபத்தில் உயிரிழந்த உத்தர பிரதேச பாஜக தலைவர்

பாஜக தலைவரான ஆஷா சிங் 2016இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

Bareilly:

பாஜகவின் உத்தர பிரதேச செயற்குழு உறுப்பினர் ஆஷா சிங், சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஞாயிறு அன்று, ஆஷா சிங் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. கார் அதிவேகமாக வந்ததால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. 

“ஆஷா சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” 

காரின் ஓட்டுநரும் ஆஷா சிங்கின் சகோதரரும் விபத்தில் பலத்த காயமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் மெஹந்திபூர் பாலாஜி யாத்திரை முடிந்து அவர்கள் வீடு சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. 

பாஜக தலைவரான ஆஷா சிங் 2016இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். பாஜகவில் சேருவதற்கு முன்பு ஆஷா சிங் சமாஜ்வாடி கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News