உன்னாவ் வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் குல்தீப் செங்கார்

கடந்த வாரம் சிபிஐ எம்.எல்.ஏ செங்கார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உன்னாவ் வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் குல்தீப் செங்கார்

கடந்த வாரம் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

New Delhi: 

உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்தர பிரதேச எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் சஷி சிங் ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அமர்வு நீதிபதி தர்மேஷ் சர்மா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 

செங்கர் உத்தர பிரதேசத்தில் சீதாப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட சஷி சிங், வேலை தேடி செங்கரின் வீட்டிற்கு வந்த பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. 

சில நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் மற்றும் அவளது உறவினர்கள், வழக்கறிஞர்கள் ரேபரேலியில் காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியது. அதில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர்.

கடந்த வாரம் சிபிஐ  எம்.எல்.ஏ செங்கார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. 

உச்ச நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்திரவிட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................