வாள்களை வைத்து நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வைரல் வீடியோ

இந்த வீடியோவில், மேடையில் நடனமாடும் மாணவிகளுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இரண்டு கையிலும் வாள்களுடன் நடனமாடுகிறார்.

வாள்களை வைத்து நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வைரல் வீடியோ

’தல்வார் ராஸ்’ குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பாரம்பரியமான நடனமாகும்.

Bhavnagar, Gujarat:

குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாள்களுடன் நடக்கும் 'தல்வார் ராஸ்' எனும், பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தி காட்டினார். 

இந்த வீடியோவில், மேடையில் நடனமாடும் மாணவிகளுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இரண்டு கையிலும் வாள்களுடன் நடனமாடுகிறார். 

Newsbeep

ஸ்ரீ சுவாமி நாராயண குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்த கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இது போன்று மேடையிலும் நடனமாடினார்.
 
தொடர்ந்து, அமைச்சரின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'தல்வார் ராஸ்' என்பது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பாரம்பரியமான நடனமாகும்.