This Article is From Nov 20, 2018

மோடிக்கு சவால் விடுத்த ராகுல்… பதிலளித்த ஸ்மிருதி இராணி!

இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் தான் இல்லை

மோடிக்கு சவால் விடுத்த ராகுல்… பதிலளித்த ஸ்மிருதி இராணி!

கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு விவாதிக்க ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார்

New Delhi:

ரஃபேல் ஊழல் குறித்து 15 நிமிடங்கள் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ள வேளையில் ராகுலுக்கு பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

‘சவால் விடுத்த ராகுல் விவாதிக்க பிரதமர் அலுவலகத்துக்கே வரலாம். ஆனால், நாட்டின் பிரச்னைகள் குறித்து குறிப்புக் காகிதம் ஏதும் இல்லாமல் முதலில் அவர் பேசட்டும். அமேதி தொகுதியின் கீழ் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் பெயர்களை ராகுல் சொன்னாலே பெரிய விஷயம்' எனப் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்தே அமேதி தொகுதி என்பது நேரு குடும்பத்துக்கு வெற்றி தரும் தொகுதியாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியின் மீது தான் தற்போது அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மொத்த கவனமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போது அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி தோல்வியுற்றார். ஆனால், ராகுலின் வெற்றி வாய்ப்பை கடினமாக்கிய பங்கு ஸ்மிருதி இராணிக்கு உண்டு.

ஆனால், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவே காங்கிரஸ் கட்சிக்கு இருந்துள்ளது. நாடாளுமன்ற அமேதி தொகுதிக்கு உள்ளான நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நடந்தத் தேர்தலில் மூன்று தொகுதிகளை பாஜக-வும் மீதமொரு தொகுதியை சமாஜ்வாதி கட்சியும் கைப்பற்றியது.

மேலும் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ‘டசால்ட் விமான நிறுவனம்' குறித்து தெரிவித்த கருத்துக்குப் பின்னர் அந்நிறுவனம் மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்து வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை டசால்ட் நிறுவனம் மற்றும் அரசு என இரு தரப்பினரும் மறுத்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில் இந்த ரஃபேல் ஒப்பந்தம் இந்தியா- பிரான்ஸ் என இரு நாடுகளுக்கு இடையே நடந்ததா அல்லது ஊழலின் மற்றொரு அங்கமா எனக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு விவாதிக்க ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். ஆனால், ‘இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் தான் இல்லை' எனப் பிரதமர் பதிலளித்துள்ளார்.

.