வேலைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்

வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார்.

வேலைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்

வேலை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். (File)

New Delhi:

வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்பதைக் காட்ட எந்தவொரு காரணமும் இல்லை என்று மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பினால்  வேலை வாய்ப்பு இழப்பு அதிகரித்துள்ளது என்பதைக் காட்ட எந்தவொரு காரணமும் இல்லை. மேலும் அரசாங்கம் வேலை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதற்கு எந்த காரணமும் இல்லை  என்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார். 

டி.எம்.சி உறுப்பினரும் மேற்கு வங்கத்தில் செராம்பூர் தொகுதியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை வழங்கினார். தனது தொகுதியில் பண மதிப்பிழப்பினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கூறினார். 

நவம்பர் 2016 இல் மத்திய அரசு பழைய 500 மற்றும் ரூ1000 புழக்கத்திலிருந்து நீக்கியது. 

ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளைத் தேடி நாட்டின் எந்த பகுதிக்கும் குடியேற உரிமை உண்டு என்றார். 

“இந்திய அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் இந்தியாவின் எல்லை வழியாக சுதந்திரமாக செல்ல அடிப்படை உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது” என்று அவர் கூறினார். 

குடியேற்றத்தால் ஏற்படும் கஷ்டங்களை குறைக்க மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1979 அரசாங்கம் செயல்படுத்துகிறது என்றார்

More News