நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திரா காந்திக்கு பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிர்மலா சீதாராமன்


மத்திய பட்ஜெட் 2019-20-யை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்யவுள்ளார். மத்தியில் 2-வது முறையாக மோடி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதத்தின்போது மத்திய அரசு கடைசியாக பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் வருமான வரி உச்ச வரம்பு இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோன்று விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி வருமான காப்பீட்டு திட்டத்தையும் கொண்டு வந்தது. 

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் 'பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி ' என்று அழைக்கப்படுகிறது. இது ரூ. 75 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி தவணை முறையில் விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் பணம் வழங்கப்படும். 

இந்த விவசாய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம். தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நம்பப்படுகிறது. 

கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட வரிகள் குறித்தும், அதில் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இதுதொடர்பாக தொழில் நிறுவனங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................