கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்: கமல்ஹாசன் காட்டம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்: கமல்ஹாசன் காட்டம்!

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்: கமல்ஹாசன் காட்டம்!

ஹைலைட்ஸ்

  • கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்
  • தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு
  • சென்னையில் 7ம் தேதி டாஸ்மாக் திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன. 

இவற்றை கவனத்தில் கொண்டு மே 7 முதல் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக' அறிவித்து. எனினும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் கூறியது.  

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனிடையே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் 07.05.2020 அன்று திறக்கப்படமாட்டாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என தமிழக அரசு இன்று காலை தெரிவித்தது. 

இந்நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட இருப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு! ” என்று அவர் தெரிவித்துள்ளார்.