This Article is From Nov 29, 2018

இங்கே போர் செய்ய ரஷ்யா தயாராகிறது: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

மூன்று கப்பல்களையும், 24 பாய்மரப்படகுகளையும் ரஷ்ய படைகள் கடல் எல்லையில் சிறைபிடித்துள்ளன.

இங்கே போர் செய்ய ரஷ்யா தயாராகிறது: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

உக்ரைனில் நிலை மோசமாக இருப்பதாக எல்லையில் ராணுவம் பலத்தை அதிகரிப்பதாக உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார்.(AFP)

Kiev:

உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கடந்த செவ்வாயன்று முழுமையான போர் நடக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார். ரஷ்யா தனது படைகளை எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதனால் போர் மிகவும் அருகில் இருக்கிறது என்று எச்சரித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபருடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார். இந்த வார இறுதியில் ட்ரம்ப் புதினை ஜி20 மாநாட்டில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் வாஷிங்டன் போஸ்டில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப் தனது பாதுகாப்பு அதிகாரிகளின் அறிக்கையை பொறுத்து இது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நிலை மோசமாக இருப்பதாக எல்லையில் ராணுவம் பலத்தை அதிகரிப்பதாக உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார். யாரும் இதனை விளையாட்டாக நினைக்க வேண்டாம்.  உக்ரைன் ரஷ்யாவுடன் முழுமையான போர் ஏற்படும் அபாயத்தில் உள்ளது.  ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இன்னும் அச்சத்தை அதிகரிக்கிறது. ஆனால் இன்னும் உளவுத்துறை சரியான நேரத்தை கணிக்கவில்லை. 

மூன்று கப்பல்களையும், 24 பாய்மரப்படகுகளையும் ரஷ்ய படைகள் கடல் எல்லையில் சிறைபிடித்துள்ளன. சிறைபிடிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

மாஸ்கோவுக்கு, கிவ் பகுதிக்கும் ஏற்கெனவே சண்டை வலுத்துள்ளது. எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை  மதிக்காமல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

.