மல்லையாவின் லண்டன் வீட்டை பறிமுதல் செய்யும் ஸ்விஸ் பேங்க்?!

ஸ்விஸ் வங்கிக்கு அளிக்க வேண்டிய 88 ஆயிரம் பவுண்ட் (ரூ.80 லட்சம்) திருப்பி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் வீடு பறிமுதல் செய்ய நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

 Share
EMAIL
PRINT
COMMENTS
மல்லையாவின் லண்டன் வீட்டை பறிமுதல் செய்யும் ஸ்விஸ் பேங்க்?!

லண்டனில் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் மல்லையா வசித்து வருகிறார்.


London: 

இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேலாக வங்கிகளில் கடன் பெற்று விட்டு அவற்றை திரும்பச் செலுத்தாத விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு லண்டனில் இருக்கும் சொகுசு பங்களாவில் அவர் வசித்து வருகிறார். 

அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இதற்கிடையே லண்டனில் உள்ள அவரது சொத்துகளுக்கு 20.4 மில்லியன் பவுண்ட் கடனை ஸ்விஸ் வங்கி வழங்கியிருக்கிறது. இதனை பெறுவது தொடர்பான வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் செய்த வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, உடனடியாக 88 ஆயிரம் பவுண்ட் (ரூ. 80 லட்சம்) தொகையை ஸ்விஸ் வங்கிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைக் கட்டத் தவறினால் லண்டன் வீட்டை ஸ்விஸ் வங்கி பறிமுதல் செய்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................