This Article is From Jul 14, 2018

யூ.ஜி.சிக்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் தொடங்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

நாட்டில் உள்ள உயர் கல்வி விவகாரங்களை, கல்லூரிகளுக்கு தேவையான நிதி வழங்கும் பணிகளை யூ.ஜி.சி அமைப்பு சரியாக செய்து வருகிறது.

யூ.ஜி.சிக்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் தொடங்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு
Chennai:

 

சென்னை: பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

முன்னதாக, யூ.ஜி.சிக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் அறிவித்திருந்தார்.  எனவே, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் உள்ள உயர் கல்வி விவகாரங்களை, கல்லூரிகளுக்கு தேவையான நிதி வழங்கும் பணிகளை யூ.ஜி.சி அமைப்பு சரியாக செய்து வருகிறது. எனினும், புதிய திட்டம் மூலம் கல்லூரிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி சார்ந்த பணிகளை மட்டும் புதிய அமைப்பின் மூலம் செயல்படுத்தவும், நிதி சார்ந்த பணிகளை அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

“நிதி ஒதுக்கீடு பணிகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகதின் கீழ் செயல்படுத்தப்பட்டால், தமிழக மாநிலத்திற்கு அளிக்க கூடிய 100% நிதியில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் 60:40 என்ற விகிதத்தில் நிதி அளிக்கப்படும்” என்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

 

 

முன்னதாக, யூ.ஜி.சிக்கு பதிலாக அமைக்கப்பட உள்ள இந்திய உயர்கல்வி ஆணையத்தை எதிர்த்து கல்வி ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மாணவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

.