This Article is From Sep 23, 2019

தேர்தல் களத்தில் Udayanidhi… DMKவின் அடுத்த அதிரடி!

“விக்கிரவாண்டி தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றி எங்களுக்குத்தான்."

தேர்தல் களத்தில் Udayanidhi… DMKவின் அடுத்த அதிரடி!

கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து விருப்ப மனு

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு இன்று வாங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி எம்.பி-யும் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி, கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளார். 

இது குறித்து கவுதம சிகாமணி, “விக்கிரவாண்டி தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றி எங்களுக்குத்தான். உதயநிதி அங்கு நின்றால், அது ஒரு ஸ்டார் தொகுதியாக மாறும். தமிழக அளவில் அந்தத் தொகுதி கவனம் பெறும்” என்று கூறியுள்ளார். 

திமுக மேடைகளில் கடந்த சில ஆண்டுகளாக வளம் வந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு, சில மாதங்களுக்கு முன்னர் இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. கருணாநிதி உயிரோடு இருந்து, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தபோது, ஸ்டாலினிடம் இருந்த பொறுப்பு அது. கருணாநிதி, அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு கட்சியின் செயல் தலைவராக பதவியேற்றார் ஸ்டாலின். தொடர்ந்து அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவராகவும் ஆக்கப்பட்டார் ஸ்டாலின். சமீபத்தில்தான் அவர் தலைவராக ஓராண்டை நிறைவு செய்தார். 

ஸ்டாலினுக்குப் பிறகு, கட்சியின் முழுக் கட்டப்பாடு உதயநிதியின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவருக்கும், திமுக-வுக்கு உள்ளேயே பவுர்ஃபுல் போஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கட்சியின் முக்கிய பேச்சாளர்களைவிட உதயநிதி அதிக இடங்களில் பிரசாரம் செய்தார். தற்போது அதன் அடுத்தகட்டமாக தேர்தல் களத்தில் உதயநிதி இறங்குகிறார். 

.