This Article is From Nov 27, 2018

இங்கிலாந்து ஆராய்ச்சி மாணவருக்கு மன்னிப்பு வழங்கியது யூஏஇ!

தேசிய தினத்தன்று யூஏஇ அதிபர் 700 பேருக்கு மன்னிப்பு வழங்கினார் என்று அந்நாட்டு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இங்கிலாந்து ஆராய்ச்சி மாணவருக்கு மன்னிப்பு வழங்கியது யூஏஇ!

மே 5ம் தேதி முதல் சிறையில் இருக்கும் ஹெட்ஜஸ், துபாய் விமான நிலையத்தில் 2 வார ஆராய்ச்சிக்காக வந்தபோது கைது செய்யப்பட்டார். 

Dubai:

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறையிலிருந்து மன்னிப்பு வழங்கி விடுவித்துள்ளது. அவரை ராணுவ ரகசியங்களை உலவு பார்க்க வந்த எம்ஐ16 உளவாளி என்று யூஏஇ கைது செய்தது.  

தேசிய தினத்தன்று யூஏஇ அதிபர் 700 பேருக்கு மன்னிப்பு வழங்கினார் என்று அந்நாட்டு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 31 வயதான ஆராய்ச்சி மாணவரான மாத்யூ ஹெட்ஜஸ் துர்காம் பல்கலைக்கழகத்தில் 6 மாதகாலமாக படித்து வந்தார். "சில நடைமுறைகள் உள்ளது அதனை முடித்த பின்னர் விடுவிக்கப்படுவார்" என்று கூறப்பட்டுள்ளது. 

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ''நாங்கள் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. இருந்தாலும் இவ்வளவு வேகமாக மன்னிப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

மே 5ம் தேதி முதல் சிறையில் இருக்கும் ஹெட்ஜஸ், துபாய் விமான நிலையத்தில் 2 வார ஆராய்ச்சிக்காக வந்தபோது கைது செய்யப்பட்டார். 

மன்னிப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் அரசு செய்திதொடர்பாளர் ஹெட்ஜஸை எம்ஐ 16 உளவாளி என்று சந்தேகித்ததற்கான வீடியோவை  காட்டினார். ஆனால் ஹெட்ஜஸ் ஆராய்ச்சிக்காக தான் அங்கு சென்றுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டது. அவருடைய குடும்பம் "ஹெட்ஜஸின் திறமையை யூஏஇ பாதுகாப்பும், நீதித்துறையும் வீணடித்துவிட்டது. எனினும் நாங்கள் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.