This Article is From Dec 13, 2018

முட்டாள் என விளையாட்டாக திட்டிய, வருங்கால கணவனை சிறையிலடைத்த பெண்!

விளையாட்டாக கூறிய விஷயத்தால் ஏற்பட்ட விபரிதம்!

முட்டாள் என விளையாட்டாக திட்டிய, வருங்கால கணவனை சிறையிலடைத்த பெண்!

அபுதாபியை சேர்ந்த நபர் ஒருவர் தனது வருங்கால மனைவியை ‘முட்டாள்' என விளையாட்டாக அழைத்ததற்க்காக யூ.ஏ.இ நீதிமன்றம் 20,000 திர்ஹம்ஸ் அபராதமும் 60 நாட்கள் கடுங்கால சிறை தண்டணையும் விதித்துள்ளது.


பெயரிடப்படாத நபர் தனது  வாட்ஸ் அப் செயலியில், தனது வருங்கால மனைவியை கோபத்தில் அவரை ஒரு முட்டாள் (அரபி மொழியில் ஹாப்லா ) என்று விளையாட்டாக திட்டியுள்ளார். அதைதொடர்ந்து அப்பெண் சற்றும் தயங்காமல் அந்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அந்நபருக்கு  தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் நகைச்சுவையாக ஒரு விசஷயத்தை சொல்லி அது தப்பாக புரிந்து கொண்ட வகையில் அந்நாட்டில் இதுவரை பல வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் ஆப் -இல் இச்சம்பவம் நடந்ததால் அது சைபர் குற்றம் கருதப்பட்டு தண்டணை வழங்கப்பட்டது.


இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவம் ஒன்றில், கார் விற்பனையாளர் ஒருவரை பிரிட்டிஷ் நபர் ஒருவர் கோபமாக திட்டியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.