2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! பதறியடித்து ஓடிய பயணிகள்!

விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! பதறியடித்து ஓடிய பயணிகள்!

சிதைந்த ரயில்பெட்டிகளை படத்தில் காணலாம்.

Hyderabad:

ஐதராபாத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கச்சிகுடா ரயில் நிலையம் அருகே இன்று காலை இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. 

கர்னூலில் இருந்து வந்த இன்டர்சிட்டி ரயிலும், ஐதராபாத்தில் இருந்து வந்த பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டுள்ளன. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தற்போதுவரை கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மொத்தம் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உஸ்மானியா அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

Newsbeep

ரயில் பெட்டிகள் உருக்குலைந்த நிலையில், அதற்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று மீட்பு படையினர் தேடி வருகின்றனர். குறிப்பாக இடிபாடுகளுக்குள் ரயில் ஓட்டுனர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தவறான சிக்னல் காரணமாக இந்த கோர விபத்து நடந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இரு ரயில்களும் குறைவான வேகத்தில் இயங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.