பைக் ஓட்டிக் கொண்டே குளியல்… என்னடா இப்டிலாம் வீடியோவ வைரல் ஆக்குறீங்க!

Viral Video: பைக்கில் இருந்த லைசென்ஸ் பிளேட்-ஐ வைத்து வாகனத்தில் இருந்த இரு நபர்களையும் உள்ளூர் போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

பைக் ஓட்டிக் கொண்டே குளியல்… என்னடா இப்டிலாம் வீடியோவ வைரல் ஆக்குறீங்க!

Viral Video: வியட்நாமின் பின் டுயோங் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

Viral Video: வியட்நாம் நாட்டின் பிஸியான சாலை ஒன்றில், இரு நபர்கள், இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே குளித்துள்ளனர். இது குறித்த வீடியோ வைரலாக, அந்நாட்டு போலீஸ், பைக் ஓட்டிய இருவருக்கும் அபராதம் விதித்துள்ளது என பிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

வீடியோவில், இரண்டு நபர்கள் பைக் ஒன்றில் சென்று கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் நடுவில் ஒரு வாலி உள்ளது. அதிலிருந்து நீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு அவர்கள் குளியலைப் போடுகின்றனர். மேல் சட்டை அணியாமல் இருந்த இருவரும், தங்கள் மீதிருந்த சோப் நுரையைக் கழுவவது தெரிகிறது. 

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், மிக ஆபத்தான காரியத்தை இருவரும் செய்தள்ளார்கள் என்று விமர்சித்துள்ளார்கள்.

வீடியோவைப் பார்க்க:

வியட்நாமின் பின் டுயோங் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உள்ளூர் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. 

பைக்கில் இருந்த லைசென்ஸ் பிளேட்-ஐ வைத்து வாகனத்தில் இருந்த இரு நபர்களையும் உள்ளூர் போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இருவருக்கும், ஏறத்தாழ 5,500 ரூபாய் ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் ஓட்டியது, ஹெல்மட் இல்லாமல் ஓட்டியது, பின்பக்கம் பார்ப்பதற்கான கண்ணாடி இல்லாமல் ஓட்டியது, காப்பீடு இல்லாமல் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்குக் கீழ் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


 

Click for more trending news


More News