சபரிமலை அருகே பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்

சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் சரிதா பாலன் மீதும், ரிபப்ளிக் டிவியின் தென் இந்திய செய்திப்பிரிவின் தலைவர் பூஜா பிரசன்னா மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

சபரிமலை அருகே பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்

ரிபப்ளிக் டிவியின் காரைச் சூழ்ந்து கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தும் காட்சி.

New Delhi:

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பல்வேறு அமைப்பினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது குறி செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

சபரிமலையில் நடப்பது என்ன என்பது பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பது தொடர்பாகவும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து இன்றைக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

j2c8mt9g

போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் சரிதா பாலன்

இதில், ரிபப்ளிக் டிவியின் காரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோன்று, நியூஸ் மினிட், நியூஸ் 18 மற்றும் ஆஜ் தக் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இன்று ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது.

ci12an98

ரிபப்ளிக் டிவியின் பூஜா பிரசன்னா

இந்நிலையில் சபரிமலையில் ஏற கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஆந்திராவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் வந்துள்ளனர். அவர்களை கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்தியவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

சிஎஸ் லிபி என்கின்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பெண், தனது முகநூலில் சபரிமலையில் ஏறி, ஐயப்பன் கோயிலுக்குப் போகப் போவதாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவைப் பார்த்த போராட்டக் காரர்கள், லிபியையும் அவரது நண்பர்களையும் மலையில் ஏறிய சில நிமிடங்களில், மறித்து வந்த வழியே திருப்பி அனுப்பியுள்ளனர்.
.