பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற இருவர் கைது!

கையும் களவுமாக சிக்கிய அவர்கள் இருவரையும் கைது செய்வதை போலீசார் வீடியோவும் எடுத்துள்ளனர்.

உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

Hyderabad:

ஹைதராபாத்தில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற இருவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். 

ஹைதராபாத்தில் ஜூப்லி பேருந்து நிலையம் அருகே உள்ள மறைவான இடத்தில் இரண்டு பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு உரிய வகையில் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்த இரண்டு நபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அவர்களை படிப்பதை வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அப்போது, போலீசாரிடம் அவர்கள் இருவரும் குழந்தை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்த குழந்தை தங்களின் பேத்தி தான் என்றும் அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இப்படி சடலத்துடன் பொதுப் போக்குவரத்தில் ஏறுவதற்கு அனுதிக்கமாட்டார்கள் என்பதால் குழந்தையை புதைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். 

Newsbeep

இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையை கையில் வாங்கி பார்த்த போலீசார் குழந்தை உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த போலீசார், அந்த இரண்டு நபர்களையும் கைது செய்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் குழந்தையின் தாத்த மற்றும் மாமா என்பது தெரியவந்தது.