This Article is From Jul 12, 2018

"உங்கள் ட்விட்டர் ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறையலாம்" - ட்விட்டர்

போலி கணக்குகளை முடக்குவதால், ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறையும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு

San Francisco:

போலி கணக்குகளை முடக்குவதால், ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறையும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு

ட்விட்டர் கணக்கை தவறான முறையில் பயன்படுத்துவதாக தெரிய வரும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது. போலியான ட்விட்டர் கணக்குகள் அதிகமாகி வருவதால், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கணக்குகள் முடக்கப்படுவதால், ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, லாக் செய்யப்பட்டுள்ள அக்கவுண்ட்களை போலி நபர்கள் பயன்படுத்துகிறார்களா என்று சரிபார்க்க வேண்டியுள்ளது. அதனால், லாக் செய்யப்பட்டுள்ள அக்கவுண்ட் பயன்பாட்டாளர்கள், தங்களின் பாஸ்வேர்டை மாற்றக் கோரி ட்விட்டர் நினைவூட்டியுள்ளது. பல முறை முடக்கப்பட்டும், முறையற்ற செயல்களில் ஈடுபடும் ட்விட்டர் கணக்குகள் லாக் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

“பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவதனால், பயன்பாட்டாளர்கள் வருந்த கூடும். ஆனால், பாதுகாப்பான முறையில் ட்விட்டரை பயன்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது” என்று ட்விட்டரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

.