This Article is From Jun 12, 2019

அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்; கொதிக்கும் நெட்டிசன்கள்!

அந்த விளம்பரத்தில் அபிநந்தன் போல, முறுக்கு மீசை உடைய ஒருவர் அதில் நடித்துள்ளார்.

அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்; கொதிக்கும் நெட்டிசன்கள்!

கடந்த பிப்.27ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் பிடிப்பட்டார்.

New Delhi:

இந்தியா-பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்.14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, அபிநந்தன் தங்கள் வசம் சிக்கிக்கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எழுப்பிய கேள்விகளுக்கு, மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பர வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்து, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே 'Am sorry. I not supposed to tell this' என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.

பின்னர், டீ நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு டீ கப்புடன் செல்வார். அப்போது, ஒருவர் கப்பை வைத்துவிட்டு செல்லுமாறு கூறுவார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோ இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் இழிவானது என்றும் ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் அந்த டீ கப்பையாவது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், உங்களால் உலக கோப்பையெல்லாம் பெற முடியாது என்று கூறியுள்ளனர்.

அதேபோல், பாகிஸ்தானால், டீ கப்பை மட்டுமே வெல்ல முடியும் என்பதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

.