This Article is From Jul 20, 2019

#SareeTwitter-ன் வின்னர் இவர்தாங்க… இது நெட்டிசன்ஸ் தேர்வு!

பெண்கள், தாங்கள் புடவைக் கட்டிய படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, #SareeTwitter என்ற ஹஷ்-டேக்கைப் பயன்படுத்தினார்கள்.

#SareeTwitter-ன் வின்னர் இவர்தாங்க… இது நெட்டிசன்ஸ் தேர்வு!

அரசியல் தொடங்கி சினிமா வரை பல பிரபலங்களும் தங்களது புடவைக் கட்டிய படத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

#SareeTwitter என்கிற ஹாஷ்டேக் இந்த வாரத் தொடக்கத்தில் பிரபலமானது. பெண்கள், தாங்கள் புடவைக் கட்டிய படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, #SareeTwitter என்ற ஹஷ்-டேக்கைப் பயன்படுத்தினார்கள். அரசியல் தொடங்கி சினிமா வரை பல பிரபலங்களும் தங்களது புடவைக் கட்டிய படத்தைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது இந்த ஹாஷ்-டேக்கில் வென்றவர் இவர்தான் என்று நெட்டிசன்கள் ஒரு படத்துக்கு மகுடம் சூட்டியுள்ளனர். 

1975 ஆம் ஆண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி ஒன்று நடந்தது. அப்போது திடீரென்று புடவைக் கட்டிய ஒரு பெண், மைதானத்திற்குள் ஓடி வருகிறார். அவர் பாதுகாப்புக்காக இருந்தவர்கள், மைதான ஊழியர்களத் தாண்டி, இந்திய கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேலுக்கு ஒரு முத்தமிடுகிறார். படேல், அரைசதம் அடித்த பின்னர் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது பிரிஜேஷ் படேலுக்கு 23 வயதானது. 

இந்த வீடியோவில் வரும் பெண் கட்டியிருந்த புடவைக்குத்தான் #SareeTwitter விருது கொடுக்கப்பட வேண்டும் என்று ட்விட்டர் மற்றும் நெட்டிஸன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அந்த வீடியோவை கீழே பார்க்கவும்:

Click for more trending news


.