மழையால் தடம் புரண்ட ரயில்: துருக்கியில் 24 பேர் பலி

சரியான பராமரிப்பு இல்லததே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மழையால் தடம் புரண்ட ரயில்: துருக்கியில் 24 பேர் பலி

கன மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் விபத்து நிகழ்ந்துள்ளது


Istanbul: 

துருக்கியின் வடக்கிழக்குப் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் இரயில் ஒன்று, பலத்த மழை மற்றும் அதைத் தொடர்ந்த நிலச்சரிவால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24  பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் காயம் அடைந்த 124 பயணிகளுக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் அஹமட் டெமிர்க்கான் கூறியதாக அரசு தொலைக்காட்சி நிறுவனமான டிஆர்டி ஹாபெர் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இரயிலில் 362 பயணிகள் இருந்துள்ளனர்.

சரியான பராமரிப்பு இல்லததே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இந்த வழித் தடத்தில் கடைசியாக பராமரிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் நடந்து என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

2004 ஆண்டு அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டதில் 41 பேர் உயிரிழந்ததே மோசமான ரயில் விபத்தாக இருந்தது. அதன் பிறகு இந்த விபத்து மோசமான விபத்தாக கருதப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................