This Article is From Sep 30, 2019

மோடி ‘இந்தியாவின் தந்தை’ ட்ரம்பின் கருத்தை விமர்சித்த - காந்தி கொள்ளுப்பேரன் துஷார் காந்தி

மகாத்மா காந்தியில் 150வது பிறந்த நாளை மத்திய அரசு பிரமாண்டமாக “ஒரு அடையாளத்திற்காக’ கொண்டாடப்படுவதாகவே துஷார் காந்தி கூறுகிறார். துஷார் காந்தி மணிலால் காந்தியின் பேரனும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுமாவார்.

மோடி ‘இந்தியாவின் தந்தை’ ட்ரம்பின் கருத்தை விமர்சித்த - காந்தி கொள்ளுப்பேரன் துஷார் காந்தி

இதுபோல் அமெரிக்க தந்தைகளில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு பதிலாக ட்ரம்ப் தன்னையே அமெரிக்க தந்தையாக அறிவித்துக் கொள்வாரா?- துஷார் காந்தி

Mumbai:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை “ இந்தியாவின் தந்தை' என அழைத்திருந்தார். ஆனால், காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி அது குறித்து விமர்சனம் செய்துள்ளார். 

“ஜார்ஜ் வாஷிங்டனை மாற்றுவதற்கு அமெரிக்கா அதிபர் விரும்புவாரா…?” என்று துஷார் காந்தி கேள்வி எழுப்பினார். 

மகாத்மா காந்தியில் 150வது பிறந்த நாளை மத்திய அரசு பிரமாண்டமாக “ஒரு அடையாளத்திற்காக' கொண்டாடப்படுவதாகவே துஷார் காந்தி கூறுகிறார். துஷார் காந்தி மணிலால் காந்தியின் பேரனும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுமாவார்.

கடந்த வாரம், அமெரிக்காவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியைப் பற்றி அதிபர் ட்ரம்ப் “இதற்கு முன்பு இந்தியா மிகவும் கருத்து வேறுபாடுகள், சண்டைகளுடன் இருந்தன. மோடி, தந்தையைப் போல அனைவரையும் ஒன்றாக கொண்டுவந்தார். ஒருவேளை, அவர் இந்தியாவின் தந்தை தானோ” என்று கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு செப்டம்பர் 24 அன்று  துஷார் காந்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பதிலளித்தபோது “தேசத்தின் தந்தையை மாற்ற  விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், இதுபோல் அமெரிக்க தந்தைகளில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு பதிலாக ட்ரம்ப் தன்னையே அமெரிக்க தந்தையாக அறிவித்துக் கொள்வாரா?” என்று கேட்டார்.  

மகாத்மா காந்தியின் படுகொலை குறித்தும் கோட்சேவை கொண்டாடும் வலதுசாரிகளின் ஒரு பகுதியைப் பற்றி கேட்டதற்கு, “காலம் யார் சிறந்தவர் என்பதை தீர்மானிக்கும்” என்றார். 

“வெறுப்பையும் வன்முறையையும் வணங்குபவர்கள் கோட்சேவைப் புகழ்ந்து பேசலாம். அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை. காந்தியை வணங்க எனக்கு உரிமை இருப்பது போல் கோட்சேவை வணங்க அவர்களுக்கும் உரிமை உண்டு. நான் அவர்களை வரவேற்கிறேன்” என்று கூறினார். மகாத்மா காந்தியில் 150வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடும் அரசாங்கத்தின் திட்டம் வெறும் அடையாளமாகவே உள்ளது என்றார். 

“மகாத்மா காந்தியின் எண்ணங்களும் சித்தாந்தமும் வாழ்க்கையிலும் நிர்வாகத்திலும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால், துரதிஷ்டவசமாக அது நடக்காது” என்று அவர் கூறினார்.

காந்தி ரூபாய்த்தாள்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னத்தில் அடையாளமாக சுருக்கிவிட்டார்கள் என்று அவர் கூறினார். 

.