மேகாலயா தேடுதல் வேட்டையில் திருப்பம் : உடல்கள் காணப்பட்டதாக தகவல்

மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Meghalaya miners: சென்னையில் இருந்தும் மீட்பு பணிக்காக அதிநவீன கருவிகள் மேகாலயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் உடல் காணப்பட்டுள்ளது
  2. இந்திய கடற்படையினர் முழு வீச்சில் தேடி வருகின்றனர்
  3. தனியார் அமைப்புகளும் சுரங்க தொழிலாளர்களை மீட்க உதவி செய்துள்ளன

மேகாலயா சுரங்க தொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் திடீர் திருப்பமாக, உடல்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவரிடன் உடல் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 160 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் ஓர் இடுக்கான பகுதியில் அந்த உடல் தென்பட்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கும் முயற்சி முழு வீச்சில், நடந்து வருகிறது.

இந்திய கடற்படையை சேர்ந்த 200-க்கும் அதிகமான வீரர்கள், கோல் இந்தியா, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா தீயணைப்பு படையினர், தனியார் பம்ப் தயாரிப்பாளரான கிர்லோஸ்கர் ஆகியோர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

தேசிய புவியியல் ஆய்வு மையமும் இந்த மீட்பு பணிக்கு உதவி செய்து வருகிறது. இதேபோன்று தனியார் நிறுவனங்கள் பலவும், சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மலைப்பாங்கான மற்றும் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது. இதனை அடைய வேண்டும் என்றால் 30 அடி நீளம் கொண்ட ஆற்றுப்பகுதியை 3 முறை கடந்து செல்ல வேண்டும். இந்த சுரங்கத்தை சுற்றி எந்தவொரு வசிப்பிடமும் இல்லை. அத்துடன், அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து நீர் வந்துகொண்டே இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................