அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்கிறார் டிடிவி தினகரன்?

அமமுகவை அரசியல் கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்கிறார் டிடிவி தினகரன்?

அமமுகவை கட்சியாக பதிவு செய்வது குறித்து சற்றுநேரத்தில் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொள்கிறார். டிடிவி தினகரன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு அமமுக சார்பில் குக்கர் சின்னம் கோரிய வழக்கில், அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. 

இதில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். இதில், அமமுக கட்சியை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தரமுடியாது என்றும் சின்னத்தை ஒதுக்க 30 நாட்கள் ஆகும் என ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுகவிற்கு 'பரிசுப்பெட்டி'சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர். 

இந்நிலையில், அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். 

தொடர்ந்து, இன்று நடந்து வரும் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

எனினும், அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அவர்கள் டிடிவி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................