This Article is From Nov 15, 2018

நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலையில் இருப்பேன் - சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்

சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தான் சபரிமலை செல்ல இருப்பது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலையில் இருப்பேன் - சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்

திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் குழு சனி ஷிங்கனாபூர் கோவிலுக்கு சென்றனர்.

New Delhi:

புனேயைச் சேர்ந்த பெண் உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வரும் 17 ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். வருடாந்திர புனித பயணத்தை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு சபரிமலை திறக்கப்பட்டிருக்கும்.

தேசாய் பூமாதா பிரிகெட் என்ற சமூக செயல்பாட்டு அமைப்பின் நிறுவனர் ஆவார். அவர் தான் சபரிமலைக்கு செல்ல இருப்பது குறித்த தகவலை முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மாநில காவல் துறைக்கு தெரிவித்து பாதுகாப்பு கோரியுள்ளார்.

தேசாய் என்டீடிவிக்கு அளித்த பேட்டியில், நவம்பர் 17 ஆம் தேதி சபரி மலையை தரிசனம் செய்ய உள்ளேன். இது குறித்த தகவலை கேரள முதலமைச்சர் மற்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேசாய் தலைமையிலான பெண்கள் குழு 60 வருடமாக பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த சனி ஷிங்கனாபூர் கோவிலுக்குள் நுழைந்தனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், சபரிமலைக்கு செல்வதற்காக ஆறு பெண்களுடன் வெள்ளியன்று கேரளாவை வந்து அடைவேன். கேரளாவிற்குள் நுழைந்ததிலிருந்து திரும்பி செல்லும் வரை எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எந்த தடை வந்தாலும் கோவிலை சென்றடைவோம் என்று கூறியுள்ளார்.

.